மட்டக்களப்பு முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்ப மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக மட்டக்களப்பினை சேர்ந்தவரும்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் தலைவருமான ச.சசிகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் தனது கடமைகளை கடந்த வெள்ளிக்கிழமை(6.7.2018) பொறுப்பேற்றக்கொண்டார்.

மட்டக்களப்ப புகையிரத வீதியில் உள்ள கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் அபூபக்கர்-அமீர்தீன்,அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை பணியக பணிப்பாளர் எஸ்.எம்.புஞ்சிபண்டார மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்ப மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பதவியேற்றுக்கொண்ட மட்டக்களப்ப மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ச.சசிகரன் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றியதுடன் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் அபூபக்கர் அமீர்தீன் மற்றும் முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் உரையாற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் பாலர் பாடசாலை பணியகத்தின் செயற்றிறனை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

மில்கோ நிறுவனத்தின் முகாமையாளராகவும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவருமான ச.சசிகரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக மட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.