நிகழ்வுகள் ஆரம்பித்தவுடன் வெளியேறிச்சென்ற யோகேஸ்வரன் எம்.பி.ஜனாதிபதி என்ன நினைத்திருப்பார்.?

க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை(7.7.2018) நடைபெற்ற சர்வதேச தினவிழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடங்கள் கழிந்த பின்பு கூட்டுறவுதின விழாவில் இருந்து வெளியேறியுள்ளார்.நிகழ்வு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும்,அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும்,மற்றும் பிரதி அமைச்சர் அமீரலிக்கும் கைலாகு கொடுத்து வெளியேறியுள்ளார்.இக்கூட்டுறவு தினவிழாவில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டும் பிரசன்னமாகியிருந்தார்.

கட்சியின் கொள்கையை காப்பாற்றும் நோக்கில் இவர் வெளியேறியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.ஏனென்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன்,எஸ்.வியாளேந்திரன்,ஆகிய இருவரும் வருகை தரவில்லை.இவர்களுடன் வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.