கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கும் இம்மாதத்திலிருந்து 1000 ரூபா வெகுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

க. விஜயரெத்தினம்)
கூட்டுறவுத்துறையை எல்லோரும் விரும்பத்தக்க வகையிலும்,நிபுணத்துவம் வாய்ந்த துறையாக மாற்றியமைக்கவுள்ளோம் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார்.மட்டக்களப்பில் சனிக்கிழமை(7.7.2018)நடைபெற்ற கூட்டுறவு தினவிழாவில் கலந்து கொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடந்து பேசுகையில்:-

இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் கூட்டுறவுத்துறையை ஒரு தெளிவான கொள்ளையுடன் கட்டியெழுப்புவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.100 வருடங்கள் பழமை வாய்ந்த துறையாக கூட்டுறவுத்துறை காணப்படுகின்றது.இக்கூட்டுறவுத்துறையில் 85இலட்சம் அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள்.நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 40 வீதம் அங்கத்தவர்கள் காணப்படுகின்றார்கள்.நல்லாட்சி அரசாங்கம் பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.மீன்பிடி,கைத்தொழில்,சிறுகைத்தொழில்,வியாபாரம்,மீன்பிடி,விவசாயம்,சிறு முயற்சியான்மை,வங்கித்தொழில் உள்ளிட்ட வேலை வாய்ப்புக்களை ஜனாதிபதியும்,பிரதமரும் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளார்கள். அவர்களுக்கு நான் நன்றிகூற கடமைப்ட்டுள்ளேன்.

இக்கூட்டுறவுத்துறை மூலம் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளது.அதாவது பொதுமக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கே எமது வர்த்தக வாணிபத்துறை அமைச்சு அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி முடிவு கட்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டை ஜனாதிபதியும்,பிரதமரும் நல்ல நிலைக்கே கொண்டு சென்றுள்ளார்கள்.சில மாகாணங்களில் கூட்டுறவுத்துறையில் கடமையாற்றும் ஊழியர்களை அவர்களின் நன்மை கருதி ஓய்வூதியத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதனை எல்லா மாவட்டங்களிலும் உள்ள ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கும் இம்மாதத்திலிருந்து 1000 ரூபா வெகுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவுத்துறையை எதிர்காலத்தில் நிபுணத்துவம்,தொழிநுட்பம் வாய்ந்த துறையாக மாற்றுவதற்கு மாற்றவுள்ளோம்.இக்கூட்டுறவுத்துறை உயர்த்துவதற்கு அனைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.