மூதூர்கிழக்கு படுகொலை தினம் பிற்போடப்பட்டுள்ளது.

பொன்ஆனந்தம்

மூதூர் கிழக்கில் 7.7.1990இல் படுகொலையான 50இற்கும் அதிகமான பொதுமக்களின் நினைவு ஆஞ்சலி நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

குறித்த நினைவு தினம் 7.7.2018திகதி நேற்று மாலை சம்பூர் சிறுவர் பூங்காவில் நினைவு கூர எற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. நினைவுக்கல் உட்பட பல பணிகள் பூரத்தியடையாதமையினால் இத்திகதி பின்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் சுமார் 50 பொதுமக்கள் ,சம்பூர்,கடற்கரைச்சேனை, கூனித்தீவு உள்ளிட்ட கிராமங்களில் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் அதிபர்கள் அசிரியர்கள்,மாணவர்கள், பெண்கள் என பலரும் மோசமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான நினைவுக்கல் அமைக்கும் பணியும் நடைபெற்றுவந்தது.அவை முற்றாக நிறைவடைய வில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் சிலரின்பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1. இராசேந்திரம் பத்மநாதன் ( உயர் தர மாணவன்)

2. பொன்னம்பலம் சச்சிதானந்தகுரு(தரம் 7 மாணவன்)

3. புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி ( அதிபர்)

4. மயில்வாகனம் பிரேமாநந்தராஜாஉயர்தர மாணவன்)

5.கோணலிங்கம் சோமேஸ்வரன் (தரம் 7 மாணவன்)

6.கனகசிங்கம் நித்தியசீலன் ( தரம் 7 மாணவன்)

7..கனகசிங்கம்

9.கனககசூரியம் சண்முகராஜா – ரவி (தரம் 10 மாணவன்)

10.ஒப்பிலாமணி இந்திரன்

11.முத்துக்குமார் விஜயகுமார்(தரம் 10 மாணவன்)

12. முத்துக்குமார் விஐயநாதன்.

13. வைரமுத்து வெற்றிவேல்

14.சங்கரலிங்கம் உதயமோகன்

15.தங்கராஜா தவராசாபப்பாசி)

16.பேச்சிமுத்து அருமைப்பிள்ளை (பொலிஸ் உத்தியோகத்தர்)

17.சொக்கன்

18.திருமதி கணபதி

19.காளிகோவில் பூசகர் (மட்டக்களப்பை சேர்ந்தவர்)

20. இராஜரெத்தினம் (கூனித்தீவு)

21. இராஜரெத்தினம் வாமதேவன் ( தரம் 10 மாணவன்)

22. வேலுப்பிள்ளை வைரமுத்து (கடற்கரைச்சேனை)

23. வைரமுத்து அளகம்மா (கடற்கரைச்சேனை)

24. அல்லிராசாசூடைக்குடா)

25. அல்லிராசா மகன் 1( சூடைக்குடா)

26. அல்லிராசா மகன் 2 ( சூடைக்குடா)

27. சுப்பிரமணியம் விநாயகநேசன்(கூனித்தீவு)

28. கணபதிப்பிள்ளை செல்வராஜா (ஓபெபொலிஸ் கூனித்தீவு)

29. வைரமுத்து சுப்பிரமணியம் (கூனித்தீவு)

30. பேச்சிமுத்து (பரியாரியர்)

31. வீ.அரசமணி.

32. .ரவிநேசன்.

33. .சிவனேசன்.

34. சி.சிங்கராசா.

35. சி.கோணலிங்கம்.

36. .யெகதீஸ்வரன்

37. கணபதி கான சரஸ்வதி

38.சி.கவிரூபன்.

39. கோ.நரவரெத்தினம்.

40.  அருனாசலம்

41.  யோகநாதன்

42.பு வரதராஜன் (மாயவன் )சூடைக்குடா