திருகோணமலை இலிங்கநகர் கிராமத்தில் 13 வீடுகளில் டெங்கு குடம்பிகள்

பொன்ஆனந்தம்

திருகோணமலை இலிங்கநகர் கிராமத்தில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 வீடுகளில் டெங்கு குடம்பிகள் இனம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பிரிவிற்குப்பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் நா.சரவணபவன் தெரிவித்தார்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பொதுச்சகாதார பிரிவிற்குள்வரும் இக்கிராமத்தில் இன்று காலை தேடுதல்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 63 வீடுகளைப்பரிசோதித்த நிலையில் இதில் 13 குடும்பங்களின் வீடுகளில் உள்ள கிணறு மற்றும் நீர்தாங்கிகளில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பெரும்பாலும் நீர்வசதியற்ற இடமாகவுள்ள இங்கும் உவர்மலைபோன்ற இடங்களிலும் நீர்சேமிக்கும் தாங்கிகளில் இக்குடம்பி இலக வாக பெருகுவதனால் நிலையான தாங்கிகளை உடைத்து மூடிபாவிக்கவல்ல பிளாஸ்ரிக் நீர்தாங்கிகளை பாவிக்குமாறு ஆலோசனை வழங்கிவருகின்றோம். கிணறுகளுக்கு மீன்வகைகளை போடுவதன்மூலம் குடம்பிகளை அழிக்குமாறும் அவ்வாறான கிணறுகளில் குளோரின்போடுவதனைத்தவிற்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று காலையில் இருந்த நண்பகல் வரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டன.