விஜயகலா மீது குற்றவியல் பொலிஸ் விசாரணை!!!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் விடுதலை புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குற்றவியல் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது,

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விடுதலை புலிகள் தாெடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரின் உரை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குற்றவியல் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.