திருமலையில் 2011இல் கொலை நேற்று மரணதண்டனை வழங்கினார் நீதிபதி இளஞ்செழியன்

பொன்ஆனந்தம்

திருகோணமலை ஆண்டான்குளம் பகுதியில் நடந்தசம் பவமொன்றில் சிறிய தந்தையைக் கத்தியால் வெட்டிய மகனான குற்றவாழிக்கு மரணதண்டனை விதித்து திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது

கடந்த 2011ம்ஆண்டு தைமாதம் 11ம்திகதி இரவு 10.00மணியளவில் ஆண்டான்குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.இதனுடன் தொடர்பு பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாழியாக இனம்காணப்பட்ட அந்தரா கென்னத்கே சமீர லக்மால் (39)என்பவருக்கே இத்தண்டனையை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி தீர்ப்பளித்தார்.இவ்வழக்கு மன்றில் நீண்ட நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.

குறித்தசம்பவத்தில் திருகோணமலை உப்புவெளிப்பொலீஸ்பிரிவில் உள்ள ஆண்டான்குளம்பகுதியில் வசித்து வந்த ரத்னாயக்கே முதியான்சலாகே ரத்னாயக்க என்பவர் கடுமையான வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

இவரது உடலில் 19 வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. இவற்றில் 5 கடுமையான காயங்களாக இருந்தன என ஆரம்ப விசாரணைகளில் பொலிசார் தெரிவித்திருந்தனர்.இவ்விசாரணைகளை உப்புவெளிப்பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.

இவரை பின்னர் பொலிசார் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிக்கிச்சைக்காக ஆபத்தான நிலையில் கண்டிவைத்தியமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

அங்கும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் படுகாயமடைந்த ரத்நாயக்க 2011தைமாதம் 17ம்திகதி மரணமானார்.

இதேவேளை குறித்த வெட்டுச்சம்பவத்துடன் தான் தொடர்பு பட்டதாககூறி இறந்தவரின் பெறா மகனான அந்தரா கென்னத்கே சமீர லக்மால் (32)என்பவர் கத்தியுடன் திருகோணமலை உப்புவெளிப்பொலிசில் சரணடைந்திருந்தார்.

தானே அவரை கத்தியால் வெட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.வெட்டிய பின்னர் தனது சகோதரியான அக்காவிடம் சென்று தான்தான் சித்தப்பாவை வெட்டியதாகவும் தெரிவித்திருந்ததாகவும் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் சட்டமாதிபர் திணைக்களத்தினால் இவருக்கெதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இறந்தவர் வெட்டிய குற்றவாழியின் தாயாரின் இரண்டாவது கணவராகும். இந்த நிலையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காணரணமாகவே இவரை குற்றவாழி வெட்டியதாக குறிப்பிடப்பட்டது.

ஆயினும் சம்பவத்தைநேரடியாக் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில் நடந்த படுகொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாழி குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலும் விசாரணைகளில் குற்றம் சந்தேக்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையிலும் இன்றைய தினம் குற்றவாளிக்கு மரணதண்டனையை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.

மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீள திருகோணமலைக்கு வந்தபின்னர் வழங்கப்பட்ட முதலாவது மரணதண்டனைத்தீர்ப்பு இதுவாகும்.