உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் .நவரத்தினம் அவர்களின் 70வது அகவை தினத்தில் 2000 மரம் நாட்டி அழகு பார்த்த மாணவர்கள்.

பொன்ஆனந்தம்

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் .நவரத்தினம் அவர்களின் 70வது அகவை தினத்தில்(01.07.2018), அவரது மாணவர்களினால் சிறப்பாக திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Green world for future அமைப்பினால் பிறந்த தின ஞாபகார்த்தமாக உட்துறைமுக வீதியில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. 

இதன்போது குடும்பத்தினர், நண்பர்கள், சமூக நலன்விரும்பிகள், தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழையமானவர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் வளர்ச்சியின் முக்கிய பங்கு நவரத்தினத்துக்கே உரியது என்பது யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை என்பது ஆழ் மனத்தூரணர்ந்த உண்மை.

அவர் பாடசாலை காலத்தில் மாணவர்களின் மனதில் பதித்த விதையாக இன்று திருகோணமலையில் 2000க்கும் அதிகமான மரக்கன்றுகளை நாட்டி, பசுமையான திருகோணமலையை எதிர்கால சந்ததிக்காக வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள் Green world for future அமைப்பினர்