வெருகல் பிரதேசத்தில் குளக்கட்டு அம்மனின் விக்கிரங்கள் விசமிகளால் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளது.

பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல்பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள முட்டுச்சேனை குளக்கட்டில் அமைந்துள்ள குளக்கட்டு அம்மன் என அழைக்கப்படும் ஆலயவிக்கிரகங்கள் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளசம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
இதனை யார் என்ன காரணத்திற்காக செய்தார்கள் என உடனடியாக தெரியவரவில்லை.

குறித்த ஆலயம் இலங்கைத்துறை முகத்துவாரத்து பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள குளக்கட்டில் அமைந்துள்ளது.

இப்பிரதேச மக்கள் காலம்காலமாக கிராமிய முறையில் மிகுந்த நம்பிக்கையுடன் வழிபாட்டு வரும் இவ்வாலயத்தில் நள்ளிரவு எனக்கருதப்படும்நேரத்தில் இனம் தெரியாதோர் புகுந்து அங்கிருந்த சிலைகளை எரித்துள்ளதுடன், அங்குகாணப்பட்ட உண்டியலையும் மற்றும் சில பொருட்களையும் உடைத்துசேதமாக்கியுள்ளனர்.
குறிப்பாக விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகள் முடிந்தவுடன் பெரியளவில் பொங்கல் பூசைகளைசெய்து வழிபடுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை சேருநுவரபொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.