ஆசிரியர்கள் இன்று சுகயின விடுமுறைப்போராட்டத்தில்.இலங்கை ஆசிரியர் சங்கம்அழைப்பு.

பொன்ஆனந்தம்

அரசியல் பழிவாங்கல் என்றபோர்வையில் முறைகேடான பதவி உயர்வைக்கண்டித்து புதன்கிழமை ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப்போராட்டத்தை நடாத்துகின்றனர்.

இதற்கான அழைப்பை இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்திருந்ததாக சங்கத்தின் திருகோணமலைக்கிளையின் தலைவர் பொ.சந்திரேஸ்வரன் தெரிவித்தார்

அண்மையில் பதுளையில் நடந்த சங்கத்தின் தேசிய மகாநாட்டில் இப்போராட்டத்திற்கான முடிவகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் 1200வரையிலான பதவி உயர்வுகள். ஆசிரியர்,மற்றும் அதிபர்கள் மத்தியில் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர

அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் இப்பதவி உயர்வு நியமனங்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.இதனால் திருகோணமலையிலும் சுமார் நூற்றுக்கும் அதிகமான பதவி உயர்வுகள் செய்யப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பதவி உயர்வுக்கான முறையான பரீட்சை மற்றும் ஒழுங்குகள் இருக்கையில், அரசியல் காரணங்களைக்காட்டி முற்றிலும் பொருத்தமற்ற வகையில் இப்பதவி உயர்வுகள் செய்யப்படவுள்ளன.இதனால் ஆசிரியர்கள் மத்தியில் உழவியல்பிரச்சனைகள்ஏற்பட்டுள்ளதுடன்,மாணவர்களின்கல்வியிலும் எதிர்காலத்தில் பெரும்பாதிப்பு ஏற்படவுள்ளன.

இதனை ரத்துச்செய்யக்கோரியும் முறைகேட்டைக்கண்டித்தும் இப்போராட்டத்திற்கு சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று நேற்றய தினம் அதிகமான ஆசிரியர்கள் சுகையீன விடுமறைக்கான விண்ணப்பங்களைச்செய்துள்ளதனை அறிய முடிந்தது.எனவும் சந்திரேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.