ஊழல்,மோசடிகளற்ற அரசியல்தலைமைகளை உருவாக்க மக்களும்,ஊடகங்களும் உழைக்க வேண்டும்

[மயூ ஆமலை]

நாட்டிலும்,மாவட்டங்களிலும் ஊழல்,மோசடிகளற்ற அரசியல்தலைமைகளை உருவாக்க மக்களும்,ஊடகங்களும் உழைக்க வேண்டும்.ஊழல்கள்,மோசடிகளை நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆதரிக்கின்ற வேடதாரிகள் யாவர் என்பதை மக்களும் ஊடகங்களும் இனங்கண்டு அவர்களை வெளிக்கொணர வேண்டும் மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களின் முகமூடிகள் களையப்பட வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்.

மட்டக்களப்பு வலயத்திற்குட்ட்பட்ட திராய்மடுக் கிராமத்திலுள்ள நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் பத்தாண்டு நிறைவு   அதிபர் திரு.குணசீலன் தலைமையில் 29.06.2018 அன்று நடைபெற்றது.அதில் பிரதம அதிதியாக கலந் கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

ஆடல்,பாடல்,நாடகம்,உரைகள் என்று பலகலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டிருந்தன.சிறுவர்களின் ஆற்றல்கள்,திறன்கள் நிகழ்ச்சிகள் மூலம் வெளிக்கொணரப்பட்டிருந்தன.இதனை வெளிக்கொணர்ந்த ஆசிரியர்களை பாராட்டுகின்றேன்.

கணிதப்பாடத்தினூடாக பாடசாலை அடைவு மட்டத்தினை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் அதிபரின் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி மேலோங்க வாழ்த்துவதுடன்  மாணவர்களின் மனங்களில் என்றும் மறக்க முடியாத ஆசான்களாக  ஆசிரியர்கள் திகழ வேண்டும் .கற்றலைக் கற்போர்க்குக் கரும்பாக்க வல்ல கற்றல் வழி தெரிந்தவனே ஆசான் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார்,வணபிதா போல் சற்குணணாயகம் அடிக்களார், உதவிக்கல்வி பணிப்பாளர் திரு த.யுவராஜன்,பிற பாடசாலை அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய இரண்டு ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.