முனைத்தீவு சக்திவித்தியாலயத்திற்கு புதிய அதிபர்

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்கள் முனைத்திவு சக்தி மகா விததியாலயத்திற்கு புதிய அதிபராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பலகாலமாக முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்திற்கான அதிபர் வெற்றிடம் நிலவியதனையடுத்து அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கிழக்குமாகண கல்வி அமைச்சில் இடம்பெற்றிருந்தது. குறித்த நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தன் பிரகாரமே குறித்த நியமனமானது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால். வழங்கப்பட்டிருந்தது.

அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்த இவர் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சுமார் 9 வரடங்களுக்கு மேலாக அதிபராக கடமையாற்றியிருந்தார். இவரது காலத்தில் பாடசாலை கல்வியில் மாத்திரமல்ல விளையாட்டு, தமிழ்த்தினப்போட்டி போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண தேசிய மட்டத்திலான சாதனைகளை நிலை நாட்டுவதற்கு காரணமாக இருந்தவர் அதுமாத்திரமின்றி இவர் தனது சேவைக்காலத்தின்போது ஆசிரியர்கள், மாணவர்களுடன் அன்பாக பழகியிருந்தார. இவரின் இடம்மாற்றமானது அசிரியரகள், மாணவர்களை கண்கலங்க செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது….பழுகாமம் நிருபர்