களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்தின் சேவைகள் வழமைக்கு

நீண்ட நாட்களாக தபால் ஊழியர்களினால் மேற்கொண்டு வந்த பணிபஸ்கரிப்பு கைவிடப்பட்ட நிலையில் தபால் சேவைகள் அனைத்தும் நேற்று வழமைக்கு திருப்பியிருந்தது.

இதன் அடிப்படையில் களுவாஞ்சிகுடி தபால் நிலையத்தின் நடவடிக்கைகள் யாவும் சீராக நடைபெற்றதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. குறித்த தபாலகத்திற்கு கீழ்இயங்கும் ஓந்தாச்சிமடம், மகிழூர்முனை, மகிழூர், எருவில், குறுமண்வெளி, போரதீவு, வைக்ககேலை, ஆகிய ஏழு உபதபாலகத்திற்கான கடிதங்கள் பிரிக்கப்பட்டு உரியவாறு குறித்த உபதபாலங்கங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மற்றும் தேங்கி கிடந்த கடிதங்களில் பதிவுத்தபால்களை பிரித்தெடுத்து பதியும் நடவடிக்கையும் தபாலகத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வழமைபோன்று தபால் ஊழியர்கள் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் மக்களும் தங்களது சேவைகளை பெற்று கொள்ளதக்கவாறு தபாலகம் வழமைபோன்று இயங்கியது….பழுகாமம் நிருபர்