திருகோணமலைத்தமிழரசுக் கட்சி மறுசீரமைப்பு

திருகோணமலைத்தமிழரசுக் கட்சி மறுசீரமைப்பு

பொன்ஆனந்தம்

  திருகோணமலை மாவட்டத் தமிழரசுக் கட்சி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது  என  இணைப்பாள ர்  ச குகதாசன் கூறினார்

2018.06.15 மற்றும் 16ஆம் நாட்களில் முல்லைத்தீவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு மற்றும் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமையத்திருகோணமலை மாவட்டத் தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்பதற்கான கூட்டம் 2018.06.26மற்றும்27ஆம்நாட்களில் திருகோணமலை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் அவர்கள் தலைமையில் திருகோணமலை நகரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சி மறுசீரமைப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதுபற்றி கலந்தாய்வு செய்யப்பட்டது. இறுதியில்வட்டாரக் கிளைகள்,

 

பிரதேசக் கிளைகள்,  மாவட்டக்கிளை என்ற அமைப்பில்கட்சி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதெனவும் ஒரு வட்டாரக் கிளையானது ஆகக் குறைந்தது ஐம்பது உறுப்பினரையாவது கொண்டிருக்கவேண்டும் எனவும்  மறு சீரமைப்புப் பணிகளை2018.08.15 ஆம் நாளுக்கு முன் நிறைவு செய்ய வேண்டுமெனவும்முடிவு செய்யப்பட்டது.இக்கட்டமைப்பானது ஐம்பது மூன்று வட்டாரக் கிளைகள், ஆறுபிரதேசக் கிளைகள்,  ஒருமாவட்டக்கிளை என்ற அடிப்படையில் அமைக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

மேலும், இப்பணிகளைக் குறித்த காலத்துக்குள் செவ்வனே  செய்து முடிப்பதற்காக மாண்புமிகு இரா. சம்பந்தன் அவர்கள்தலைமையில் பதினான்கு உறுப்பினர் கொண்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

இக்குழுவில்மாண்புமிகு க.துரைரட்ணசிங்கம், சி.தண்டாயுதபாணி,  க. கனகசிங்கம், நா. இராசநாயகம்,மரு. ஞானகுணாளன்,  சுந்தரலிங்கம்,  சத்தியசீலராசா,   க. செல்வராசா,  ச.குகதாசன், சி. தர்சன்,  கு.விஷ்ணு, சு.பாஸ்கரலிங்கம்,  த.இராசமணி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.  ச குகதாசன் இதன் இணைப்பாளராகப்  பணிபுரிவார்.

இது பற்றியகூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் அல்லது கட்சியில் இணைய விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக  அல்லது0262223063 என்ற தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.