புல்லுமலை தொழிற்சாலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவா?

 

புல்லுமலையில் நிறுவப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிச்சாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதிகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் மற்றும் தவிசாளர்கள் உறுப்பினர்கள் சிலர் நேரடியாக தொடர்வு பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு புல்லுமலையில் நிறுவப்படும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் அவர்களின் தண்ணீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலையானது புல்லுமலையில் உள்ள ஏழு கிராமங்களுக்கு சொந்தமான நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதுடன் அந்த பகுதியில் உள்ள குளம், கிணறுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு எதிர்காலத்தில் அப் பிரதேசமே பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

இதனை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் விவசாய அமைப்புக்கள் மீனவ அமைப்புக்கள் எதிர்க்கின்றன.

இவ்வாறு மாவட்டத்தில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்க்கின்ற ஒரு தொழிற்சாலையை மாவட்டத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எதிர்வு கூறப்படும் தொழிற்சாலையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் நிறுவ முற்படுகிறார் என்றால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்ட ஆதரவே காரணம் என கூறப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் தவிசாளர் -பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் இடையே மோதல்!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் புல்லுமலையில் அமைக்கப்படும் தண்ணீர் தொழிற்சாலை தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி தவிசாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 25.06.2018 திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் புல்லுமலையில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீ தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் சபையில் முன்வைத்தபோது அதற்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் கொதித்தெழுந்ததுடண் குறித்த தொழிட்சாலை தன்னுடையது என்றும் அதனை தடுத்து நிறுத்தினால் தான் வழக்கு தொடரப்போவதாகவும் கூறினார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்துடன் செயல்படுவதாகவும் அபிவிருத்திக்கு தடைவிதிப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மட்டக்களப்பு புல்லுமலையில் நிறுவப்படும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் அவர்களின் தண்ணீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலையானது புல்லுமலையில் உள்ள ஏழு கிராமங்களுக்கு சொந்தமான நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதுடன் அந்த பகுதியில் உள்ள குளம், கிணறுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு எதிர்காலத்தில் அப் பிரதேசமே பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

இதனை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் விவசாய அமைப்புக்கள் மீனவ அமைப்புக்கள் எதிர்க்கின்றன.

இவ்வாறு மாவட்டத்தில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்க்கின்ற ஒரு தொழிற்சாலையை மாவட்டத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எதிர்வு கூறப்படும் தொழிற்சாலையை பொது மக்களுக்கோ மக்கள் சார் அதிகாரிகளுக்கோ தெரியாது அனுமதி பெற்று ஒரு தனி தமிழ் பிரதேசத்திற்குள் தொழிற்சாலையை நிறுவும் காத்தான்குடி நகரசபை தவிசாளரின் செயற்பாடு இனவாதமா? அதனை தடுக்க முயற்சிக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இன வாதமா? எது இனவாதம்?

உண்மையில் ஒரு சாதாரண வர்த்தகராக இருந்தால் அல்லது ஒரு தமிழராக இருந்திருந்தால் இவ்வாறான தொழிச்சாலைக்கு மட்டக்களப்பில் அனுமதி வழங்கப்பட்டிருக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் மற்றும் தவிசாளர் ஒருவரின் தொழிற்சாலை என்பதன் காரணமாகவே சகல விதிமுறைகளையும் மீறி மக்களின் ஆதரவு இல்லாத ஒரு தொழிற்சாலையை மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டக்களப்பில் மக்கள் விரோத செயற்பாடு ஒன்றை செய்வதற்கு கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக? என்ற கேள்வி எழுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அவர்கள் நிலத்தடி நிறை உறிஞ்சி நிலங்களை பாலைவனமாக்கும் செயற்பாட்டிற்கு ஆதரவாக செயற்படுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

சட்டப்படி அனுமதிகள் இருக்குமானால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலை செய்ய முடியும் என்பதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொள்கை அதனை தடுக்க முற்படுபவர்களை இனவாதிகள் என்பதா? கட்சி கொள்கை

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மற்றும் பிரதி அமைச்சர் என்ற பதவிகளை பயன்படுத்தி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அதிகாரிகளை பயமுறுத்தி அனுமதிகளை பெற்று அமைக்கப்படும் தொழிற்சாலையை ஏற்கவேண்டிய தேவை பொது மக்களுக்கு இல்லை .

பொது மக்கள் விரும்பாத ஒரு தொழிற்சாலையை அங்கு அமைக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கும் இல்லை. மீறி அமைக்கப்படுமாக இருந்தால் அது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியே அதை அமைக்கின்றார்கள் என்பது திண்ணம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஆட்சி செய்யும் செங்கலடி பிரதேச சபை நினைத்தால் குறித்த தொழிற்சாலைக்கு இடை‌க்கால தடை விதிக்க முடியும் ஆனால் அவர்கள் அதை செய்யாது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார்கள்.

அதாவது செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் செங்கலடி பிரதேச சபையின் விசேட அமர்வில் தடைசெய்யப்பட்ட தொழிசாலையை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆராய்வதற்காக அரசாங்க அதிபர் தலைமையிலான நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ள நிலையில் அந்த நிபுணர் குழுவின் அறிக்கை வரும் வரை குறித்த தொழிசாலைக்கான இடைக்கால தடை உத்தரவை செங்கலடி பிரதேச சபையில் ஏகமனதான தீர்மானம் மூலம் நிறைவேற்ற முடியும். அந்த தீர்மானத்தின் படி தொழிச்சாலை பணிகளை இடை நிறுத்தலாம்.

ஆனால் அதை செய்யாது அவர்கள் வழக்கு தொடர்பார்கள் என்ற பயத்தில் மொனமாக இருப்பதுதான் பிரதேச சபையின் மக்கள் சேவை இதற்கு தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள் சபை முடிவெடுத்தால் அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் செயலாளருக்கு உண்டு அதை முதலில் பிரதே சபை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செங்கலடி பிரதேச சபை மேற்கொள்ளுமா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு செங்கலடி பிரதேச சபை விலைபோகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.