மட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்

 

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன் தன்னுடைய இடமாற்றம் தொடர்பான வழக்கும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் மீளப் பெறப்பட்டது.

மேற்படி தனக்கு எதிராக வழங்கப்பட்ட இடம்மாற்றத்திற்கு எதிராக நேசகுமாரன் விமலராஜால் தாக்கல் செய்யபப்ட்ட வழக்கானது தவிசாளர் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் பாரளுமன்ற உறுப்பினர், பணிப்பாளர் விசாரணை அதிகாரி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் காணி சீர்திருத்த ஆணைக்குழு, செயலாளர் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பணிப்பாளர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அம்பாறை மாவட்டம் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபப்ட்டது.

வழக்காளியினால் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாவது, அவருக்கு வழங்கப்பட்ட சேவையிலிருந்து இடை நிறுத்தம் ஆனது தன்னிச்சையாக எந்த விதமான காரணங்களும் சரியாக காட்டபப்டாமல்; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிக்கு முரணாக சட்டதிட்டத்திற்கு அப்பால்பட்டது என்பதாகும்.

வழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச் சீர்திருத்த ஆணைக் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன் தன்னுடைய இடமாற்றம் தொடர்பான வழக்கும் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் மீளப் பெறப்பட்டது.

இது தவிர மேலும் நேசகுமாரன் விமலராஜ் பணிப்பாளராக கடமையாற்றிய போது தன்னுடைய கடமையில் அச்சமின்றி பாகுபாடின்றி சட்ட விரோத காணி அபகரிப்புக்கு எதிராக செயற்பட்டமையால் 22.02.2017 அன்று புன்னக்குடா நில அபகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று வீடு திரும்பிய அன்றைய தினம் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி தற்போது பொலீஸ் பாதுகாப்புடன் கடமையில் ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் தனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் சம்மந்தமாகவும் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களினாலும் அவர்களின் ஆதரவளர்களினாலும் தொடச்சியாக சமூக வலைத்தளங்களில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்களை பரப்புவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனுவில் குறிப்பிடுவதாவது 11.10.2017 அன்று அனுமதி பெற்று பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கலந்துரையாடும் போது தான் அவருடைய பாதுகாப்பு; உத்தியோகஸ்தர்களினால் தான் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர அன்றைய சம்பவ இடமான பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு பொலிசார் வரவழைக்கபப்ட்டதுடன் தனக்கு வழங்கப்பட்ட பொலீஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி மனுவை சிரேஷ்ட சட்டத்தரணி ஜீ.ஜீ.அருள்பிரகாசம் அவர்களது அறிவூட்டலின் படி ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன உடன் சட்டத்தரணி ஆ.N.சிறிமானே அவர்கள் வழக்குக்கு தோற்றினார்கள்.

கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதிகளான பி.பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேயசேகர ஆகியோரால் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக எச்சரித்ததுடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு நீதிமன்ற ஆணையினை மீற எந்த விதமான அதிகாரமும் கிடையாது என்றும் இது ஒரு சட்ட விரோதமானது என்றும் கருதியது அத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன் தன்னுடைய இடமாற்றம் தொடர்பான வழக்கும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் மீளப் பெறப்பட்டது.