கிரானில் பாரியவிபத்து பிரான்ஸிலிருந்த வந்த 12 வயது கெவின் என்ற சிறுவனும் மரணம்

மட்டக்களப்பு -காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மாஹா சொகுசு பஸ் வண்டியும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த கொக்கட்டிச்சோலையை சேர்ந்த வேன் ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து கிராண் சந்தியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வானின் சாரதி ஸ்த்தலத்தில் உயிரிழந்ததுடன் வான் மற்றும பஸ்ஸில் வந்த பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுளளனர்.

குறித்த விபத்து தொடர்பில் கேள்வியுற்ற பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் நள்ளிரவு நேரம் என்பதையும் பொருட்படுத்தாது உடனடியாக ஸ்த்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி , மற்றும் வைத்தியசாலை தரப்பினை உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

குறித்த விபத்து நடந்த பிரதேசத்தில் பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தோற்றமளிப்பதுடன் மதில்கள், மின்கம்பங்கள் சுவர்கள் என்பன சேதமடைந்து காணப்படுகிறது-

(இணைப்பு )

நேற்றிரவு கிரான் சந்தியில் நடந்த விபத்தில், வேனின் சாரதி (27) உட்பட,
வேனில் பயணித்த பிரான்ஸிலிருந்த வந்த 12 வயது கெவின்என்ற சிறுவனும் உயிரிழப்பு.ஏனைய மூன்றுபேர் ஆபத்தான நிலையில்.

பிரான்ஸிலிருந்து வந்தவர்கள், மட்டக்களப்பு, பார் வீதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது