திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டுமைதானத்தில் நீச்சல்தடாகம்

பொன்ஆனந்தம்
திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டுமைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல்தடாகம் விளையாட்டு வீரர்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை நடந்த இந்நிகழ்வில் நகரசபைத்தவிசாளர் ந.இராஜநாயகம்.உப தவிசாளர் உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை விளையாட்டுத்துறைப்பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நீச்சல்தடாகத்தில் உறுப்புரிமைபெற்றவர்களும் விளையாட்டுப்போட்டிகளில்ன்போதும் வீரர்கள் பயன்படுத்தமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் பாராட்டை வெளியிட்டபோதும்
இதேவேளை இங்கு இடைநடுவில் கிடக்கும் திறந்தவெளி தேசிய விளையாட்டு மைதானமும் புனர்த்தாரணப்பணிகள் முடிவுறுத்தி வீரர்களின்பாவனைக்கு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். யுத்தம் நிறைவிற்குப்பின்னர் இம்மைதானத்தின் பணி ஆரம்பிக்கப்பட்டபோதும் பல்வேறு காரணங்களால் இழுபறி நிலமையில் கிடந்து சீரழிவதாகவும் பலரும் சுட்டிக்காட்டினர். நகர சபை இதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.