த.தே.கூட்டமைப்பின் மிகுதிக்கால தேசியப்பட்டியல் ஆசனம் கல்முனைக்கு வழங்கப்பட வேண்டும்!

கேதீஸ்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டரை வருடங்களுக்கு முதற்கட்டமாக திருகோணமலைக்கும், முல்லைத்தீவுக்கும் துரைரெட்ணசிங்கம் சாந்நி சிறிஸ்கந்தராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தன.முதல் இரண்டரை வருடகாலத்திற்கு பின்னர் ஏனைய மாவட்டங்களக்குவழங்குவதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தரைமயும் குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டரை வருட காலம் முடிவடைவதால் மிகுதியாக உள்ள வருடங்களில் ஒரு ஆசனத்தை கல்முனை தொகுதிக்கு வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் அரசியல் ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கி வரும் மாவட்டம் என்பது யாவரும் அறிந்த விடயம். அதிலும் கல்முனையை பூர்வீகமாகக் கொண்ட இப்  பிரதேச தமிழ் மக்கள் பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளால்  அபிவிருத்திஇ இருப்பு என்பவற்றை தக்க வைப்பதில் பல்வேறு சவால்களையும்இ இன்னல்களையும் எதிர்நோக்குவதுடன் பல்வேறு இன்னல்களையும்  எதிர்நோக்குவதால் த.தே.கூட்டமைப்பின் மிகுதிக்கால தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கல்முனை தொகுதிக்கு வழங்க வேண்டியது இக்கட்சித் தலைமைகளின் முக்கிய பொறுப்பாகும்.

மிக நீண்ட காலமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகம் நிரந்தரமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் பலங்களால் தடுக்கப்பட்டு வருகின்றமையும் வெளிப்படையான உண்மை. ஆனால் இந்த நல்லாட்சி அரசுடன் பங்குதாராக இருக்கும் த.தே.கூட்டமைப்பின் தலைமைகள் இப்பிரதேச செயலகத்தை இதுவரை நிரந்தரமாக்க தவறியுள்ளமை இப்பிரதேச தமிழ் மக்களிடம் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் கல்முனை நற்பிட்டிமுனையில் நடைபெற்ற   தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் அவர்களால் இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவாக  உறுதியளிக்கப்பட்டிருந்ததுடன் அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது

ஆனால் இதுவரை எதுவும் நடந்தாக இல்லை இவ்விடயம இப்ரபிதேச மக்களிடம் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

த.தே.கூட்டமைப்பின் தலைமைகளுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் தொடர்பாக அக்கறை இல்லையா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. தற்போது இந்த தேசிய பட்டியல் விடயத்திலும் ஏமாற்றாமல் இப்பிரதேசத்தின் நிலைமையினை கருத்தில் கொண்டு கல்முனை தொகுதிக்கு ஒரு உறுப்பினரை வழங்க வேண்டியது இந்த தலைமைகளின் கடமையாகும்.