திருமலையில் வீரமாநகர், பாட்டாளிபுரம்,  இளக்கந்தை கிராம மக்களுக்கு குடி நீர் இணைப்புக்கான பொருட்கள்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட வீரமாநகர்  பாட்டாளிபுரம் மற்றும் இளக்கந்தை ஆகிய கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான குடி நீர் இணைப்பினை வழங்குவதற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது

 இநிகழ்வு    வீரமாநகர் சனசமூக நிலைய கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது

கிராமிய கல்வி நிறுவனத்தின் ணைப்பாளர்,  ஓய்வுநிலை கிராமசேவகர் எஸ்.சந்திரகுமார்   ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி .தயானந்த குரு மற்றும்கிராமங்களின் தலைவர்களின் பங்களிப்புடன்  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பணம் செலுத்தப்பட்ட 60 பயனாளிகளுக்கான இணைப்புக்கான பொருட்கள் வழங்கப்பட்டது

 புதிய பயனாளிகள் 100 பேரை தெரிவு செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது

இப்பிரதேசத்தில் 570 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதுடன் கூடுதலானோர் வறுமைக்கு உட்பட்டும் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கும் உட்பட்டும் உள்ளனர் கிராமமட்டத் தலைவர்களின் கருத்துப்படி பலர் நீர் இணைப்புகளை பெற்றுத்தருவதாக கூறினாலும் அதன் பெறுபேறுகள் குறைவாக உள்ளதாக கூறுகின்றனர் .

 கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மூலம் ஒருமாதமாக காலம்பகுதிக்குள்   இவ் வேலைத்திட்டத்தினை மிக விரைவாக செயற்படுத்த உதவிய கிராமியகல்வி அபிவிருத்தி நிறுவன சமூகத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் பயனாளிகளினை உரிய முறையில் தெரிவு செய்ய ஒத்துளைத்த கிராம மட்டசங்கத்தினருக்கும் விரைவான  செயற்பாட்டிற்காக உதவிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்  மற்றும் சபையினருக்கும்  மக்கள்  நன்றிகூறினர் .