விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே வீரவங்சவின் பிரார்த்தனை

போரில் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்கும் யோசனை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இன்று -21- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்படவில்லை. அது கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபம். அந்த சுற்றுநிருபத்தை திருத்தி இழப்பீடு வழங்கும் முறையை மேலும் அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.
விமல் வீரவங்ச பொயக் கூறுவதில் திறமைசாலி. நாட்டுக்குள் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதே வீரவங்சவின் தேவை. மீண்டும் பிளவை ஏற்படுத்தி தென் பகுதி மக்களை ஏமாற்றும் தேவை விமல் வீரவங்சவுக்கு உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே வீரவங்சவின் பிரார்த்தனை. வடக்கு, தெற்கு என்று பிளவை ஏற்படுத்தும் வீரவங்சவின் தேவையானது மிகவும் ஆச்சரியமானது.
2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சற்று குறைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். தவறுகளை திருத்தி முன்னோக்கி செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.