இ.த.ஆ.சங்கத்தின் பொதுச்செயலாளரின் அறிக்கை

———- Forwarded message ———-
From: Ceylon Tamil Teachers Union Trincomlaee <[email protected]>
Date: 2018-06-21 15:20 GMT+05:30

அனைத்து ஊடகத்துறைப் பணிப்பாளர்களுக்கும், இணையத்தள நண்பர்களுக்கும்.

இலங்கைத் தமிழர் சங்கம் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரது அனுமதியில்லாமல் தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம். அத்தோடு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தைப்பற்றி சிலர் அவதூறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எமது உறுப்புரிமையின் உண்மையான அங்கத்தவராக இருக்க முடியாது. அவ்வாறு அவதூறை ஏற்படுத்துவோர்மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம். அத்தோடு அவ்வாறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீதும் நாம் நடவடிக்கை எடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படலாம். ஆகையால் தயவு செய்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சார்ந்து வருகின்ற எந்தச் செய்தியாக இருந்தாலும் எம்மோடு கலந்தாலோசித்து பிரசுரிக்கமாறு (வெளியிடுமாறு) வினயத்துடன் வேண்டி நிற்கின்றோம்.

உங்களால் தனித் தமிழர்களைக் கொண்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் என்றும் வாழும்.

சரா.புவனேஸ்வரன்.
பொதுச்செயலாளர்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.