பிரதேசத்தில் முதன்முறையாக 400பேர் பங்கேற்ற யோகா ; மகிழடித்தீவில் காட்சி

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகமும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும் இணைந்து கலாபூசணம் செல்லையா துரையப்பா மாணவர்கள் நடாத்திய 04வது சர்வதேச யோகா தின நிகழ்வு மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இன்று(21) வியாழக்கிழமை காலை 6.30மணிக்கு நடைபெற்றது.

இதில் 400 பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர். முதன்முறையாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அதிக மாணவர்களை ஒரே இடத்தில் கொண்டு யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஐஸ்வரியம் யோகாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட யோகா குரு செல்லையா துரையப்பா, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியோரிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்டனர்.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான மா.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.