குருமண்வெளியில் சேவைநலன் பாராட்டுவிழா

செ.துஜியந்தன்
பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய ஆங்கில ஆசிரியர் பொ.உமாரூபன் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 இற்கு பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றார்
இவரது சேவையினை பாராட்டி கௌரவிக்கும் சேவைநலன் பாராட்டு நிகழ்வு வித்தியாலய அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பிரதி அதிபர் கே.பிரபாகரன் உட்பட ஆசிரியர்கள், கல்விசார ஊழியர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசி அதிபர் க.சத்தியமோகன் தெரிவிக்கையில்….
சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர் பணி என்பது மகத்தானபணியாகும். தியாக சிந்தனையும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களாலே வளமான சமூகத்தை உருவாக்க முடியும் அந்தவகையில் இப்பிறப்பில் ஆசிரியர் பணி செய்பவர்கள் இறைபணி செய்வதற்க்கு ஒப்பானவர்களாக கருதப்படுவார்கள்.
தற்காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றவர்களை காண்பது அரிதாகிவிட்டது. அப்படியிருந்தும் சிறந்த ஆசிரியர்களை இன்றும் நாம் காண்கின்றோம். எமது பாடசாலையில் சேவையாற்றி பதவியுர்வு பெற்றுச்செல்கின்ற ஆங்கில ஆசிரியர் உமாரூபன் அவர்களது சேவையை மறக்கமுடியாது. இப்பாடசாலையின் கல்வி முன்னேற்றத்தில் அவரது பணி சிறந்தபணியாகும். அமைதியும், அடக்கமும் மற்றவர்களை மதிக்கின்ற பண்பும் கொண்டவர் உமாரூபன். இவர் வாழ்க்கையில் மென்மேலும் பதவியுர்வுகளைப்பெற்று சாதிக்கவேண்டும் என்றார்.