வவுணதீவு கும்பனாறு கிராமத்தில் பாலம் அமைக்குமாறு கோரிக்கை

செ.துஜியந்தன்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கும்பனாறு கிராமத்திலுள்ள கும்பனாறு வீதிக்கு பாலம் ஒன்றை அமைத்துத்தருமாறு கிராமமக்கள் பிரதேச அரசியல்வாதிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கும்பனாறு நரசிங்கவைரவர் ஆலய நிர்வாகசபையினரும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
பல்வேறுவசதிகளற்ற நிலையில் கும்பனாறு கிராமமக்கள் வசித்தவருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள வீதிகள் ஒற்றையடிப்பாதையாகவும் சிதைவடைந்தும் உள்ளது. மழைகாலங்களில் வீதிகளில் மக்கள் பயணிக்கமுடியாத நிலையுள்ளது. வெள்ளநீர் தோங்கி நிற்பதினால் தோணிகளிலே பயணிக்கவேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இக் கிராமத்தில் அமைந்துள்ள நரசிங்கவைரவர் ஆலயத்திற்குச் செல்லும் கும்பனாறு வீதியானது பள்ளம் படுகுழியாக காட்சியளிக்கின்றது. இவ் வீதிக்கு குறுக்கே சிறியதொரு பாலம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இம் மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
அத்துடன் வீட்டுவசதி, குடிநீர்வசதி, வாழ்வாதார உதவிகள், தொழில்வாய்ப்புக்கள் என்பவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கும்பனாறு கிராமமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.