பாண்டிருப்பு குருக்கள்வீதியை புனரமைக்குமாறு பிரதேசமக்கள் கோரிக்கை

செ.துஜியந்தன்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ்க்கிராமங்களில் அமைந்துள்ள பல வீதிகள் சிதைவடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக வீதிகளில் பயணிப்போர் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில் பாண்டிருப்பு கிராமத்திலுள்ள குருக்கள்வீதியானது கடந்த முப்பதுவருட காலமாக செப்பனிடப்படாதுள்ளது. பிரதானபோக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகவுள்ள குருக்கள்வீதியானது பிரசித்திபெற்ற திரௌபதையம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளதுடன் இவ் வீதியில் பிரபல தனியார் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளது.
தினமும் இவ் வீதியினால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயணிக்கின்றனர். பல மாணவிகள் வீதியில் தடுக்கிவீழ்ந்து விபத்துக்கள்ளாகும் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. குருக்கள்வீதியின் அவல நிலை தொடர்பாக பல வருடங்களாக அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் இன்று அவ் வீதியை புனமைப்பு செய்வதற்க்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம்தெரிவிக்கின்றனர்.
குறித்தவீதியினை கருத்திலொடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.