மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 810 மில்லியன் அபிவிருத்திதிட்டங்கள்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்துவைத்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இப்ராலெப்பை தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இருதயநோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் சிறுநீரக சிகிச்சைப் பிரிவிற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

இந்த அபிவிருத்த திட்டங்கள் சுமார் 810 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், நீண்ட காலத்திற்கு பின்னர் மிகப்பெரும் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிகழ்வில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசல் காசிம், பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

அவுஸ்ரேலிய மற்றும் உள்நாட்டு  நிதிவளங்குனர்கள் இக்கட்டட மற்றும் உபகரணங்களுக்கான நிதி மூலங்களைவழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.