புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதிநாள் தீமிதிப்பு  வைபவம் வௌ்ளிக்கிழமை 15ஆம் திகதி பிற்பகல் 5.00 மணியளவில் ஆரம்பமாகி மிக கோலாகலமாக நடைபெற்றது.  இந் நிகழ்வில் சுமார்​7​ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேற்றிக்கடனை நிறைவேற்றினர்

வௌ்ளிக்கிழமை காலை தீக்குழிக்கு தீ ஏற்றும் வைபவம் உள்ளிட்ட கிரியைகள் நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 4மணியளவில் அம்பாளும் தீமிதிப்பு நேற்றிக்டன் செய்யும் பக்தர்களும் மட்டக்களப்பு முகத்துவார வாவியில் மஞ்சள்குளித்தபின்  தீமிதிப்பு வைபவத்தில் கலந்துகொண்டனர்.

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மனின் இறுதிநாள் திமிதிப்பு உற்சவத்தின்போது, வடக்கு கிழக்கு மற்றும் இலங்கையின் பல  பாகங்களிலிருந்தும் வருகைதந்து பக்தர்கள் கலந்துகொள்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது