கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்?.இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

கிழக்கு மாகாண சபையினை தமிழர்கள் அல்லாதவர்கள் கைப்பற்றினால் அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது. எனினும், கிழக்கின் அடுத்த முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை உரிய நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா

வியாழேந்திரனின் அண்மைகால செயற்பாடுகள் தொடர்பில் திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது, அவர் புளொட் அமைப்பை சேர்ந்தவர் என்பதால் இந்த விடயத்தை அந்த கட்சியிடம் எடுத்து கூறியுள்ளதாகவும் வியாழேந்திரன், தமிழரசுக் கட்சியை பிரதி நிதித்துவப்படுத்துவாரேயானால், இது தொடர்பில் துணிந்து தீர்மானிக்கப்படும் என்றும், எவ்வாறாயினும் அவரின் கருத்துக்கள் தொடர்பில் பகிரங்கமாக கருத்து கூற முடியாத நிலை காணப்படுவதாகவும்  தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.