மட்டக்களப்பில் நிலைபேற்றுத் தன்மையான புலம்பெயர்தல் தொடர்பில் இரண்டுநாள் கலந்துரையாடல்

0
776

பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான நிலைபேறான தன்மையை ஏற்படுத்துதல் தொடர்பான இரண்டு நாள் கலந்துரையாடல் மட்டக்களப்பு கிழக்கிலங்கை தன்நம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் (எஸ்கோ) பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டனார்.

சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஸ்ரெபனி பேலியட் , புலம்பெயர்வு மற்றும் அபிவிருத்திப்பிரிவின் தலைமை அதிகாரி பெனில் தங்கராசா, சிரேஸ்ட தேசிய திட்ட அதிகாரி மதுசிகா லன்சேகர, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுவிஸ் அரசாங்கத்தின் அனுசரணையில் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவிஸ் முகவர் அமைப்பின் நிதியுதவியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பான புலம்பெயர்தல் சம்பந்தாமான செயற்திட்டத்தில் தேசிய , மாவட்ட ரீதியில் முன்னெடுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்தே இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கிழக்கிலங்கை தன்நம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் (எஸ்கோ) நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை எஸ்.பரித்தியோன் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்

தேசிய ரீதியான பங்காளிகளாக சர்வNதுச தொழிலாளர் நிறுவனம், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, ஐக்கிய நாடுகள் பெண்கள். (யூ.என்.- வுமன்), செடெக் கரித்தாஸ், வெல்வற்றிஸ் ஆகிய நிறுவனங்கள் இத் திட்டத்தில் பணியாற்றுகின்றன.

அதே போன்று மாவட்ட ரீதியாக பிரிடோ – ஹற்றன், சுவோட்- அம்பாறை, சி.எச்.ஆர்.சி.டி – குருநாகல், கரித்தாஸ் செத் ரெண- கொழும்பு, எஸ்.கோ – மட்டக்களப்பு ஆகியன நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.

சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஸ்ரெபனி பேலியட்டின் பங்களிப்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பாக புலம்பெயர்வதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சட்டரீதியான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள தொழிலாளர்களது நலன்கள், அவர்களது தேவைகள், உரிமைகள் தொடர்பில் செயற்பட்டுவரும் இந் நிறுவனங்கள் முன்னெடுத்துவருகின்ற திட்டங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது.

அத்துடன், இச் செயற்பாட்டின் மேம்பாட்டுக்கு அரச நிறுவனங்கள் வெளிநாட்டு வேலைப்வாய்ப்புப் பணியகம் என்பவற்றுடன் இணைந்து என்ன வகையான பங்களிப்பினை நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.