மட்டக்களப்பு மாவட்டத்தில் வீகிதாசார முறையில் பொலிசாரை நியமிக்க வேண்டும்

பொலிசாரின் தவறான செயற்பாடுகளால் முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க மாவட்டத்தில் தமிழ் தெரிந்த பொலிசார் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
சட்டம்,ஒழுங்கு மீறலை தடுத்து நிறுத்துவதோடு,மட்டக்களப்பு மாவட்டத்தில் வீகிதாசார முறையில் பொலிசாரை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் குற்றச் செயல்களும், வீதி விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிசார் மனது வைத்தால் இதனைக் குறைக்க முடியும் என்பதனை தங்களது மேலான கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரம்-76, முஸ்லிம்களின் விகிதாசாரம்-23, சிங்களவர்களின் விகிதாசாரம் -01 இவ்விகிதாசாரம் நடைமுறையில் இருக்க இம் மாவட்டத்தில் அண்ணளவாக 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிட்டத்தட்ட சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு 1500 பொலிசார் கடமை ஆற்றுபவர்களாக இருந்தால்; இதில் எத்தனை வீதம் தமிழர்கள் 10வீதம் கூட தமிழர்கள் இல்லை.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றுவதற்காக வீகிதாசார அடிப்படையில் பொலிசாரை நியமனம் செய்வதற்கு மாவட்டத்திலுள்ள இளைஞர்,யுவதிகளை தெரிவு செ;வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் இந் நாட்டின் நல்லாட்சி நிலவவில்லை. சிங்கள இனத்தவர்களே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்றனர்.

இந்த பாதுகாப்புப் படையினர் கடந்த காலத்தில் தமிழ்மக்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது உண்மையே

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 60ற்கு மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து பொலிசார் கடமையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர். இப்பொலிசாரில் 85 வீதமானவர்கள் தமிழ் தெரியாத பொலிசாராகும். இவர்களால் வாகன ஒட்டுனர்கள் இடைமறிக்கப்பட்டு சோதனைகள் இடம் பெறும்போது பொலிசாருக்கு தமிழ் மொழியும்,பொதுமக்களுக்கு சிங்கள மொழியும் தெரியாத காரணத்தால் பல்வேறு தவறுகள் இடம் பெறக் காரணமாகின்றது. சிங்களம் தெரியாததமிழ் சாரதிகள் வீதி ஒழுங்கை மீறினார்கள் என்று பொலிசாரால் வழங்கப்படும் தண்டப்பணம் சிட்டை தனிச் சிங்களத்தில் வழங்கப்படுவதால் ஏன் எதற்கு என்ற விபரம் தெரியாமல் தண்டம் செலுத்துகின்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றார்கள்.
எனவே தமிழ் தெரிந்த மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களை மாவட்டத்தில் நியமனம் செய்யாதுவிட்டால் மொழி புரியாமல் சுரண்டப்படும் பணம் வீனாகுவதோடு வீதி விபத்தும் குறைகின்ற நிலைமை தோன்றாது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் யுவதிகளை ஒருசிலபொலிசார் நிறுத்தி தேவையற்ற கேள்விகளை கேட்டு அசௌகரியப்படுத்தும் கேள்விகளை தொடுப்பதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

(1)மேலும் நல்லாட்சி அரசு உதயமான பின், சமூகசேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் மதிதயன், மண்டூர்-1, என்பவர் 26.5.2015 அன்று இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவம்,

(2)காணி உதவி ஆணையாளர் நேசகுமார்- நிமல்ராஜ் களுதாவளை என்பவர் 20.3.2017அன்று இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சம்பவம்,

(3) கடை வியாபாரியான பழனி பாவா, என்று அழைக்கப்படும் ஆதம்பாவா, 6ம்குறிச்சி, காத்தான்குடி வயது -73 என்பவர், 09.6.2018 அன்று நல்லிரவு காத்தான்குடி தேனீர் கடையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை போன்றவை தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. இதனால் மக்கள் பொலிசார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
மாவட்டத்தில் பல எல்லைக் கிராமங்களில் கள்ளத் தனமாக காட்டு மரங்களை வெட்டி அழிவு செய்வதும், சட்ட விரோதமணல் அகழ்வில் ஈடுபடுவதும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதும், சட்ட விரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுதல், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்திமீன் பிடித்தல் திருட்டுச் சம்பவங்கள் போன்றகுற்றச் செயல்களுக்கு எதிராக பொலிசார் துரித நடவடிக்கைகளை எடுக்கின்ற வேளையில் சிலபொலிசார் இத்தகைய நடவடிக்கைகளை கண்டும் காணமல் விடுவதாகவும் பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார், திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள், கட்டிடங்கள் வவுணதீவு,கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை போன்ற பகுதிகளில் பொலி;சாரால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தூரிதமாகமீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே ஒரு சில பொலிசாரின் தவறான செயற்பாடுகளால் முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க மாவட்டத்தில் தமிழ் தெரிந்த பொலிசார் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்  என்றும் குறிப்பிட்டுள்ளார்.