நீண்டகாலமாக அரசாங்க காணிகளில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காணி உறுதி

அரசாங்கத்திற்குட்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்து நீண்டகாலமாக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் வாழ்ந்து வருவோருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை காணி அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைவாக நாடு முழுவதிலும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் பெந்தர எல்ப்பிட்டிய தேர்தல் தொகுதியின் வத்துறுவில என்ற கிராமத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ரெக்கடஹேன, திப்பட்டுவாவ, வத்துறுவில ஆகிய கிராமங்களில் வாழும் மக்களின் காணி பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

 

10 லட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டமாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.