தபால் ஊழியர்கள் சேவைக்கு திரும்ப வேண்டும்

தபால் ஊழியர்களின்; நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இந்நிலையில் ஊழியர்கள் தொழிற்சங்க நடிவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செயலாளர் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிலித்தார்.

 

தபால் சேவையை பாதுகாக்கவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்கும் நோக்கிலும் சேவைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் ஊழியர்களை கேட்டுக்கொண்டார்.