கேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை அவருக்கு மீண்டும் அதேபொறுப்பை வழங்குங்கள் விமல் ஜனாதிபதிக்கு கடிதம்

லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை நிகழ்வு தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும், மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு தடையேற்படுத்தும் தனிப்பட்ட காரணங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு ஒன்றை வழங்குமாறும் விமல் வீரவங்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த, லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ, சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் விஸ்வமடு பகுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது, அப்பகுதி மக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது(AD)