விஞ்ஞான பூர்வமான அமைச்சரவை மாற்றமே நியாயமானது

 ஸ்ரீநேசன் ,பாராளுமன்ற உறுப்பினர்

அமைச்சரவை மாற்றத்தில் விஞ்ஞானத்தன்மை பேணப்படும் என்று ஜனாதிபதி சார்ந்த வட்டாரங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஆனால் இம் மாற்றத்தில் விஞ்ஞானத்தன்மை குன்றியிருப்பதை காணமுடிகிறது. குறித்த துறையின் விடய ஞானங்களை விளங்கிக்கொண்ட, அத்துறை சார்ந்த விடய ஞானமுள்ளவருக்கே அத்துறைக்கான அமைச்சுப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் அனைவருக்கும் இது பொருத்தமாகும்.

பௌத்த சாசன அமைச்சர்,பிரதியமைச்சர் பௌத்தராக இருத்தல் ,இந்துவிவகார அமைச்சர் பிரதியமைச்சர் இந்துவாக இருத்தல், இஸ்லாமிய விவகார அமைச்சர்,பிரதியமைச்சர் இஸ்லாமியராக இருத்தல் ,கிறிஸ்தவ அமைச்சர்,பிரதியமைச்சர் கிறிஸ்தவராக இருத்தல் என்பன விஞ்ஞானத் தன்மைக்குரியதாகும்.

மாறாக இந்து விவகாரத்தினை கையாளும் பொறுப்பினை இஸ்லாமியரிடம் ஒப்படைத்தல் அர்த்தமற்ற செயற்பாடாகும்.இவ்விடயம் ஒவ்வொரு மதத்திற்கும் பொருத்தமற்றது.கௌரவ காதர்மஸ்தான் அவர்களது பிரதியமைச்சின் பொறுப்பில்  இந்து விவகாரத்தினை அளித்திருப்பது  வின்ஞானத்தன்மையற்ற செயற்பாடாகும்.இது இந்து மக்களை மனநிலையை அசௌகரியப்படுத்தும் செயட்படாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

எனவே ஜனாதிபதியின் இச்செயற்பாடு  மறுபரிசீலனைக்குட்படுத்தி திருத்தியமைக்க வேண்டியதாகும்.நல்லாட்சியில் தெரிந்தோ,தெரியாமலோ நலிவுத்தன்மைகளை விளைவித்துவிடக்கூடாது. சாதாரண விடயங்களையே அசாதாரணப்படுத்துவது  அறிவியலுக்கு அப்பாற்பட்ட  செயலாகும். கௌரவ ஜனாதிபதியவர்கள் இவ்விடயத்தில் உடனடி கரிசனை எடுக்க வேண்டும்.கௌரவ பிரதி அமைச்சரும் இந்து மக்களின் உணர்வுகளை மதித்து இந்து விவகாரத்தை ஒரு இந்து பிரதியமைச்சரிருக்கு பொறுப்பளிக்க முன்வரவேண்டும் . என பாராளுமன்ற உறுப்பினர்  ஞானமுத்து ஸ்ரீநேசன் இந்து விவகாரபிரதியமைச்சர் நியமனம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.