இந்து விவகார பிரதி அமைச்சர் விவகாரம் மட்டக்களப்பில் நடந்த போராட்டம்.

க.விஜயரெத்தினம்)
இந்து விவகார பிரதி அமைச்சர்  நியமனத்திற்கு மட்டக்களப்பில் இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினர் எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தி தங்களின்  எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.

இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கே  எதிர்ப்புத் தெரிவித்து இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் காந்திப் பூங்கா முன்னால் புதன்கிழமை (13ஆம் திகதி) மாலை 5.45 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்து விவகாரங்களுக்கு முஸ்லிம் ஒருவரை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டது இந்து மக்களை அவமானப்படுத்தும் செயலாகும்,  இதனால் இந்து முஸ்லிம் மதங்களுக்கிடையே முரன்பாடுகளை தோற்றுவிக்க வழிவகுக்கும் எனவே இப் பிரதியமைச்சர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்து தமிழர் ஒருவருக்கு வழங்கவும் என இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.

அண்மையில் ஜனாதிபதியால் இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டார். இந் நியமனம் தொடர்பில் நாடு பூராவுமுள்ள இந்துக்கள் பல பகுதிகளிலும் எதிர்ப்பை தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.