பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து இந்துமத விவகார பிரிவு நீக்கப்படும்

பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து இந்துமத விவகார பிரிவு நீக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நேற்று நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்து மதத்தைச் சாராத ஒருவரிடம் இந்து மத விவகாரம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளமைக்கு அதிருப்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்தே, குறித்த விடயதானத்தை பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், இந்துமத விவகார பிரதி அமைச்சு விடயதானத்தை காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தாம் கோரியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.