தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தக்கோரிய ஆர்ப்பாட்டம் Viedio

புல்லுமலை பிரதேசத்தில் தொடங்கப்பட உள்ள தண்ணீர் தொழிற்சாலை எமது இயற்கை வளங்களை அழித்து மனிதகுலத்தின் வாழ்வியலுக்கு சவாலாக அமையவுள்ள பாரியதொரு திட்டத்துக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது..

சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்கப்படவுள்ள இவ் தண்ணீர் தொழிற்சாலை 200 அடி ஆழத்திற்கும் மேலாக நிலத்தை துழையிட்டு ஆழ்துளை கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை சுரண்டி அதை விற்று பணமாக்கும் இத் தொழிற்சாலையின் மூலமாக எமது இயற்கை வளம்மிக்க நிலங்கள் பாலைவனமாக மாற்றப்படுவதோடு எம் எதிர்கால சந்ததியின் இருப்பை கேள்விக்குறியாக்கும் 100 வருட திட்டமாகும்.

ஆழ்துளை கிணறுகள்மூலமாக இங்கு நீர் உறிஞ்சப்படுவதனால் இத் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பை சுற்றியுள்ள பலநூறு கிலோமீற்றர் தூரத்திலுள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இப் பிரதேசத்திலுள்ள #விவசாயக்குளங்கள்#தாவரிப்புக்குளங்கள் என்பவற்றின் நீர் மட்டங்கள் வெகுவாக குறைந்து வரட்சி ஏற்பட்டு எமது விவசாய செய்கைகளும், கால்நடை வளர்ப்புகளும் இருந்த இடமின்றி போவதை யாராலும் தடுக்கமுடியாததாக போய்விடும்.

எனவே, எமது இயற்கைவளத்தினை சுரண்டி, எம் எதிர்கால சந்ததிகளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தீய்மைகளை கொண்ட இவ் தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தக்கோரிய ஆர்ப்பாட்டமானது காந்தி பூங்கா முன் இடம்பெற்றன இதைனை பொதுமக்களுடன் சேந்து மட்டு இளைஞர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.