மட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)

மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் மனித நேய பணியிலும் ஈடுபட்டிருந்தமைக்காக இக்கௌரவப் பட்டம் வழங்கப்பட்டதுடன், புத்தகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இக்கௌரவப் பட்டத்தை எஸ்.ஓ.ஏ.எஸ் பல்கலைக் கழகம் லண்டன், பொசிரிவ் நெகரிவ், பாத் பல்கலைக்கழகம், சர்வசேத எச்சரிக்கை, வறுமை ஆராய்ச்சி நிலையம் இலங்கை, மார்டீன் சத்துரற்றி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப் பட்டத்தினை வழங்கியுள்ளன.
இதற்கான அனுசரணையினை ஈஎஸ்.ஆர்.சி பொருளாதார மற்றும் சமூக ஆய்வுக்கான மன்றம், கலை மற்றும் மனிதாபிமான ஆய்வு மன்றம் ஆகியன வழங்கியுள்ளன.
இப் பட்டத்தினை லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். பல்கலைக்கழக அபிவிருத்திக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் ஜொனததன் குட்கான்ட்,  பாத் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் அரசியல் விஞ்ஞான அலகின் கலாநிதி ஒலிவர் வால்ரன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இவ்வாய்வானது 2016 ஃ 2017ம் ஆண்டில் இலங்கை, நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் நடத்தப்பட்டு அதன் பிரகாரம் இக் கௌரவப் பட்டமானது வழங்கப்பட்டது.
யுத்தகாலத்தில் இவர் ஆற்றிய பணி மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. என்ற அடிப்படையில் இக் கௌரவப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் இணைந்து உள்ளுர் அரசசார்பற்றநிறுவனங்கள், சிவில் சமூகஅமைப்புக்கள், தேசியமட்டஅரசசார்பற்றநிறுவனங்கள்,  வெளிநாட்டுஅரசசார்பற்றநிறுவனங்கள், ஐக்கியநாடுகளின் அமைப்புக்கள் ஃபிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு ஆகிய நிறுவனங்கள் பணிபுரிந்துள்ளன  என்பதுகுறிப்பிடத்தக்கது.
சொலமன் பசில் சிவ்வெஸ்டர் சமாதான செயலகத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கான இணைப்பாளராகவும், 2006ம் ஆண்டு ஆடி மாதம் 14ம் நாள் மட்டக்களப்புமாவட்டத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து யுத்தத்தை எதிர்த்து சமாதானத்தை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்றினை நடாத்தி வெற்றிகண்டவர்.
வெகு நாட்களாக தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு  கொழும்பு புகையிரத சேவையினை உரிய அமைச்சுடன் கூட்டங்களை நடாத்தி,சேவையை ஆரம்பித்ததில் முக்கிய பங்கை வகித்தவர் , ஜப்பான் – சமாதானத்திற்கான தூதுவர் யசூசி அகாசி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த சமயத்தில் சிவில் சமூக அமைப்பின் சார்பாகஅவரைவரவேற்று மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மண்முனைப் பாலத்தினை அமைப்பதற்கான கோரிக்கை மனு ஒன்றினைக் கொடுத்துஅதற்கான ஒப்புதலையும் பெற்றார்.
இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தினை உருவாக்கி மாவட்ட சமூக பாதுகாப்பு வலயம் ஒன்றினை அமைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கியவர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை நிறுவனங்கள் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு உதவியவர்.  இவர் மனிதநேய கூட்டமைப்பு பிராந்திய அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளராகவும் சமாதானத்துக்கும் அகிம்சைக்குமான  அமையத்தின் தலைவர்., மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புக்களின் தலைவராகவும் பதவிவகிக்கின்றார்.
இக்கௌரவப் பட்டமானது இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒருவருக்குக் கிடைத்துள்ளது என்பதுடன் அதுவும் ஒரு தமிழர் (மட்டக்களப்பு) பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வைபவமானது கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கடந்த மேமாதம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.