13ம் திகதி திருமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில்

0
633

(டினேஸ்)

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று 10 ஆம் திகதி திருகோணமலை பாலையூற்றில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவியின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவி எதிர்வரும் 13 ஆம் திருகோணமலையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் முதல் அமர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நாம் இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகளை முழுமையாக புறக்கணிக்கின்றோம் அதனடிப்படையில் அன்றைய தினம் நாம் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையின் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

அந்தவகையில் ஓ.எம்.பி என அழைக்கப்படும் இவ்வலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எமது தரவுகளை வழங்கப்போது இல்லை ஒரு கால கட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார் இலங்கையில் எவரும் காணாமல் போகவில்லை என ஆகவே எதற்காக இவ்வலுவாலகம் மாவட்ட ரீதியில் அமைக்கின்றனர் யுத்தம் நிறைவிற்கு வந்து 10 வருடங்களாகியும் எமது உறவுகளை கொடுத்து நாம் தவிர்க்கின்றோம் எமது உறவுகளுக்கான இழப்பீடுகள் எமக்குத் தேவையில்லை ஆகவே அன்றைய தினம் எமது முழு எதிர்ப்பு நடவடிக்கையினை முற்றாக வெளிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிருப்புகின்றேன்.

என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவி இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.