சர்வதேச சமுத்திர தினத்தின் தேசிய நிகழ்வு திருகோணமலையில்

சர்வதேச சமுத்திர தினத்தின் தேசிய நிகழ்வு இன்று (08) திருகோணமலையில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை கடல் சார் உயிரினங்கள் மற்றும் சுற்றாடல் சார் பிரச்சனைகளை தெளிவு படுத்தும் ஊடகவியலாளருக்கான பெரியளவிளான செயலமர்வை திருகோணமலை கடற்படைப்பிரிவில் உள்ள சோபர் ஜலன்ட் கொட்டலில் நடாத்தியது.

இதன் ஒரு அங்கமாக ஊடகவியலாளர் குமு விற்கு செயல் முறை விளக்கமளிக்கும் வகையில் திருகோணமலை நிலாவெளி புறாமலை தேசிய பூங்காவிற்கு அதிகாரசபை இவ்வூடகவியாளர்களை அழைத்துச் சென்று இன்று கள விளக்கத்தை அளித்தனர்.
இங்கு அதிகார சபையின் தேசிய முகாமையாளர் கலாநிதி ரோனி பிரதிப் குமார் கலந்து கொண்டு விளக்கமளிப்பதனையும் இலங்கையின் தேசிய ரீதியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டிருப்பதனையும் காணலாம்.