பட்டிப்பளையில் முதியோருக்கான வைத்திய முகாம்.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முதியோர்களுக்கான வைத்தியமுகாமும், விழிப்புணர்வும் இன்று(08)வெள்ளிக்கிழமை செயலககேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பிற்கு அமைய, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் வேண்கோளுக்கிணங்க மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையினால் இலவச வைத்தியமுகாம் நடாத்தப்பட்டது.

இதில் பிரதேசத்திற்குட்பட்ட முதியோர்கள் பலர் கலந்து கொண்டு வைத்திய ஆலோசனைகளை கேட்டறிந்ததுடன், வைத்திய பரிசோதனைகளிலும் ஈடுபட்டனர்.