கொல்லநுலையில் தேசிய ரீதியில் சாதித்த மாணவனுக்கு கௌரவிப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற பு.ரிசாந்தன் என்ற மாணவன் கடந்த வருடம் நடைபெற்ற சமூகவிஞ்ஞானப்போட்டியில் தேசியரீதியில் 3ம் இடத்தினைக் பெற்றுக்கொண்டார். இம்மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(08) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலையினால் சாதித்த மாணவனுக்கு கற்றல் உபகரணங்களும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதேவேளை விழாக்குழுவினரின் எதிர்பார்பின்றி சமூகத்தில் உள்ள பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரினால் பல பரிசில்களும் மாணவனுக்கு வழங்கி வைக்கப்பட்டன. மேலும் வழிகாட்டிய த.தேவநாதன், க.ரவிசங்கர், துலஸ் செல்வேந்திரன் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், கிராமசேவை உத்தியோகத்தர் க.சுவேந்திரன், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.