தமிழரின் உயிர் கிள்ளுக்கீரையல்ல என்பதை தெரிவிக்கவும் நாம் ஒன்று திரள்வோம்.

கவனஈர்ப்புப் போராட்டம் 9.06.2018

சனிக்கிழமை காலை 9 மணி -பாட்டாளிபுரம் (கிராமசேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக)

மாவிலாற்று சண்டையில் மரணித்த போராளியின் மனைவியும், ஐந்து பிள்ளைகளின் தாயுமான திருமதி. தர்மன் ராணி அவர்கள் கடந்த சனி இரவு பாட்டாளிபுரத்தில் வைத்துக் கழுத்து அறுக்கப்பட்டு திருமலை ஆதார வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்.

நான்கு நாட்கள் கடந்த நிலையில் காவல்துறையால் சந்தேகத்திற்கிடமான எவரும் கைது செய்யப்படவில்லை.

தொடர்புடைய பெண்ணென மக்களால் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இக்கொலை முயற்சியின் பின்னணி பற்றி மக்கள் தெளிவாக அறிந்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் கவலையீனமாக இருக்க விடக்கூடாது. திருகோணமலை வாழ் தமிழ் மக்களின் உயிரை அவ்வளவு இலகுவாகப் பறிக்கலாம் என்ற நிலை ஏற்பட விடுவோமாயின் அது எமது வாசல் கதவையும் தட்டும்.

கொலைமுயற்சிக்கான எமது கண்டனத்தைப் பதிவு செய்யவும், உரிய தரப்புக்கள் கவலையீனமாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழரின் உயிர் கிள்ளுக்கீரையல்ல என்பதை தெரிவிக்கவும் நாம் ஒன்று திரள்வோம்.

அனைத்து மகளிர் அமைப்புக்கள், தமிழ் மக்கள், பொது அமைப்புக்கள், அரசியற் கட்சியினர் என அனைவரையும் அங்கு கூடுமாறு அழைக்கின்றோம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
திருகோணமலை.