திருமலையில் ஆலய நேர்த்தி ஊர்வலத்தில் வாள்வெட்டு

பொன்ஆனந்தம்

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் நேற்று மாலை 7.45 மணியளவில் ஆலய நேர்த்தி ஊர்வலமொன்றின் நுழைந்து நடாத்தப்பட்ட வாழ்வெட்டுச்சம்பவத்தில் எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் மேலும் பலர் சிதறி ஓடியதில் உபாதைக்குள்ளானதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையில் புகழ்பெற்ற சல்லி முத்துமாரியம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றன.

இப்பொங்கல் உற்சவத்தின் வேளையில் நகரில் இருந்தும் வேறு கிராமங்களில் இருந்தும் சார,சாரியாக மக்களும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுபவவர்களும் ஆயிரக்கணக்கில் நிலாவெளி நெடும்சாலை நிரம்பிய வண்ணம்செல்வது வழமையாகும்.

இவ்வாறான சூழலில் நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி,தூக்கு காவடி, மற்றும் இன்பிற நேர்த்தி ஒழுங்ககளுடன் நகரில் இருந்தும் வேறு இடங்களில் இருந்தும் ஆலயத்தை நோக்கி கால்நடையாக சென்றவண்ணமிருந்தனர்.

இவ்வாறு சென்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான அடியார்கள் மத்தியில் தேவாநகர் பகுதியில் இருந்து திடிரென வாழ்களுடன் புகுந்த குளுவென்று சரமாரியாக வாழ்வெட்டில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விசாரணைகளில் தெரிவித்தனர்.இவர்களில் பலர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தசம்பவத்தில் எட்டுப்பேர்வரை காயமுற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவர்களில் ஏழுபர் திருகோணமலை பொது வைத்தியமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவ்வாறு திடிரென நடந்த இச்சம்பவத்தினால் பெண்கள்,சிறுவர்கள்,அடங்கலான பொதுமக்கள் சிதறி ஓடியுள்ளனர்.இவ்வாறு சிதறிஓடியவர்கள் வீதி வடிகான் உள்ளிட்ட பல இடங்களில் விழுந்ததில் உபாதைக்குள்ளானதாகவும் சிறிய காயங்களுக்குள்ளானதாகவும் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்குமுன்னர் திருக்கடலூர் கிராம குளுவொன்றிற்கும் தேவாநகர் குளுவொன்றிகுமிடையில் நடந்த மோதல் சம்பவமொன்றை அடிப்படையாக வைத்தே தேவாநகர் குளுவினரால் இந்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எது எப்படியாகிலும் ஒரு சமய நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக்கொண்டிருந்த சமையம் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனை பொது அமைப்புக்கள் வெகுவாக கண்டித்துள்ளன. சமய நிகழ்வொன்றில் சிறுவர், பெண்கள், மத்தியில் கூச்சமின்றி மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் காரணங்கள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என பொது அமைப்புக்கள் பொலிசாரை வேண்டி நிற்கின்றன.

மேலதிக விசாரணைகளை பொலிசார்மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில் சிலரைகைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

காயப்பட்டவர்களில் ஒருவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் இலிங்கநகர்,திருக்கடலூர்,பள்ளத்தோட்டம்,குச்சவெளி பகுதிகளைச்சார்ந்தவர்களே காயப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் ஆலயத்திற்குச்சென்ற சாதாரணமான மக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் குறிப்பிடத்தக்கபொலிசாரும் வீதிகளில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.