உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுப்பு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எலையன்ஸ் பினான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் அதிபர் சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

 இந் நிகழ்வில் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் டனியல் பாக்கியம் உட்பட நிறுவனத்தின் ஊழியர்கள்பலரும்  கலந்து கொண்டனர். இதன் போது பிராந்திய முகாமையாளரினால் மாணவர்களுக்கு சுற்றாடல் தினம் சம்பந்தமாக காலை ஒன்றுகூடலின் போது விளக்கமளிக்கப்பட்டது.
சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு இந் நிறுவனத்தின் ஊடாக  “தூய்மையான சூழல் தூய்மையான காற்று” எனும் தொனிப்பொருளன் கீழ் நாடு  பூராகவும் இரண்டு இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற் அமைவாகவே இப்பாடசாலையும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு  பாடசாலை  வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நிழல்தரும் மரக்கன்றுகள் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள், நிறுவனத்தினர் ஆகியோரினால் நடப்பட்டது….பழுகாமம் நிருபர்