மட்டக்களப்பில் சௌபாக்கியா வீடமைப்புத்திட்டம்

(மயூ.ஆ.மலை )

வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் கௌரவ .சஜித் பிரேமதாச அவர்கள்  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின்  ஒரு தொகுதியான ‘சௌபாக்கியா’ வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(01.05.2018) சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் என்போர் கலந்தது கொண்டனர்.சுமார் எழுபத்தைந்து (75) வீடுகளை கொண்ட இவ்வீட்டுத்திட்டம்  காணி , வீடுகளற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் நடுத்தர வருமானத்தை கொண்ட காணி, வீடுகளற்ற மக்களுக்குமாக கடன் அடிப்படையில் வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணித்துக் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.