ஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை!

ஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை!
——————————————————————————–  
நீரினால் ஏற்பட்ட விபரிதமோ? பரிசோதிக்க முன்வருவார்களோ??
—————————————————–
 
       —- படுவான் பாலகன் —-
“குளத்தில்ஆற்றில் குளித்த காலமும்,கிணற்றில் தண்ணீர் அள்ளி குளித்தகுடித்த காலமும் நீங்கி குழாயில் குளிக்கும்குடிக்கும் காலமாகிவிட்டது. தண்ணீர் காசுக்கு வாங்கவேண்டிய காலமொன்று உருவாகும் என்று கூறியபோது சிரித்தார்கள். குடிநீருக்கான போராட்டமொன்று ஏற்படுமென்று கூறியபோதும் நகைத்தார்கள். இன்று அவையெல்லாம் கண்முன்னே நடந்தேறுகின்றது. ஆற்று மண் என்ற போர்வையில் ஆற்றோரங்களில் உள்ள மண்களை களவாடுகின்றனர். நாலுபேர் நல்லா இருப்பதற்காக ஊரையே அழிக்கும் செயல்கள்தான் நடைபெறுகின்றன. வில்லங்கமான உலகில் எதைப் பேசினாலும் வில்லங்கம்தான்ஆனாலும் நாட்டில் நடைபெறும் அநியாயங்களையும் பார்த்துக்கொண்டும் இருக்கமுடியவில்லை. அப்படி இந்த உலகில் இருப்பதென்றால் குருடனாகவும்செவிடனாகவும்,ஊமையனாகவும் இருந்தால்தான் அநியாங்களை காணாமல் இருந்துவிடலாம். நமக்கு மனவிரக்தியும் ஏற்படாது.” என பெரியகாலபோட்டமடு சந்திக்கு அண்மையில் உள்ள கிணறொன்றில் குடிப்பதற்காக நீர் அள்ளிக்கொண்டிருந்த தங்கம்மா பக்கத்தில் முட்டியுடன் தண்ணீர் அள்ளுவதற்காக நின்றுகொண்டிருந்த சந்தனப்பிள்ளையுடன் பேசிக்கொண்டிருந்தார்.
ஏன் இவர்கள் பேசியதை இங்கு சொல்கின்றேன் என்று சிலர் சிந்திக்கலாம். இவர்களது பேச்சு இத்தோடு நிறைவுபெறவில்லை. இன்னும் பல முக்கிய விடயங்களை கிணற்றடியில் நின்று கிணற்றைப் பார்த்து பேசிக்கொண்டனர். அவ்வாறு என்ன விடயத்தைத்தான் பேசினார்கள்?, தண்ணீர் அள்ளுவதற்காக வந்தவர்கள்தண்ணீரைப்பற்றிதான் பேசினார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுள்ளது. என்பது பலருக்கு தெரியும். ஆனால் அப்பிரதேசத்தில் உள்ள பல ஊர்களை பலருக்கு தெரியாது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமாஎன்பதும் சந்தேகம்தான். அவ்வாறு பலருக்கு தெரியாத இடங்களில் ஒன்றுதான் பெரியகாலபோட்டமடு கிராம பிரதான வீதிக்கும்கொல்லநுலை பன்சேனை பிரதான வீதிக்கும்,சாமாந்தியாற்றிற்கும்பெரியகாலபோட்டமடு சில்லிக்கொடியாறு பிரதான வீதிக்கும் இடையில் உள்ள  உப்புக்குளம் என்ற கிராமம்.
இக்கிராமத்தில் அண்ணளவாக 50 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்க்கையினை நடத்துகின்றார்கள். இங்கு குடிநீர் பிரச்சினையும் பாரிய பிரச்சினையேயாகும். இக்கிராமத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்பில்தான் தங்கம்மாவும்,சந்தனப்பிள்ளையும் கிணற்றடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
கிட்டித்த மண்ணும்மேடும்மலைக்கற்களும் உள்ள இப்பிரதேசத்தில் குடிநீருக்காக கிணறு அமைப்பதென்பதும்குறைந்த செலவுடன் செய்து முடிக்கலாம் என்பதும் கடினமானதே. வீடுதோறும் கிணறு அமைப்பதென்பதும் சவாலானதே. இதனால்தான் குடிநீர் எந்நேரமும் கிடைக்ககூடியகிணறு அமைப்பதற்கேற்ற இடங்களை தேடி பொருத்தமான இடங்களில் குறிப்பாக பள்ளங்களில் கிணற்றினை அமைப்பதனையே இப்பிரதேசத்தில் காணமுடிகின்றது. அந்நிலையில்தான் பள்ளங்களையும்நீர் அதிகம் கிடைக்ககூடிய இடங்களையும் தெரிவு செய்தே உப்புக்குளப்பகுதியில் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக தங்கம்மா கூறுகின்றார். ஏழுக்கும் குறைவான கிணறுகள் அமைந்துள்ள இப்பகுதியில் மூன்றுக்கும் குறைவான  கிணறுகளில் கிடைக்கும் நீரையே இங்குள்ள மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சிலருக்கு வீட்டுக்கு அண்மையில்பலருக்கு வீட்டில் இருந்து தூரமான பகுதியிலேயே கிணறு அமைந்துள்ளது.
“இதனால் காலைவேளையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் காலையில்5.30மணிக்கு முதல் எழுந்து வயல்,வரம்புகளின் ஊடாக கிணற்றினை அடைந்து தாம் ஒவ்வொருவரும் கொண்டு செல்லும் வாளிகளின் ஊடாக நீரினை அள்ளி பலர் சேர்ந்து குளிப்பது சாதாரணமாகிவிட்டது” என சந்ததனப்பிள்ளையும் சாதாரணமாக சொல்லிக்கொண்டிருந்தார். குடிநீரின் தேவை பெரிதாக தற்போதைய மாதச்சூழலில் ஏற்படாதுவிட்டாலும்ஆடி மாதத்தின் பின்னர் தண்ணீருக்கான தேவையிருக்கின்றது. கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்து செல்வதினாலே இந்நிலையேற்படுகின்றது. குளங்களோஆறுகளோ தோண்டப்படுகின்ற போதுநீரினது நீர்மட்டமும் குறைவடைந்து செல்கின்றதாக கூறப்படுகின்ற சூழலில் ஆற்றுமணலின் அகழ்வும் குடிநீர் தேவை தற்காலத்தில் அதிகரிப்பதற்கான காரணமேயாகும்.
படுவான்கரையிலே உன்னிச்சைக்குளம் அமைந்திருந்தாலும்எழுவான்கரையில் உள்ள மக்களே உன்னிச்சைக்குளத்து நீரினை குடிநீராகப்பயன்படுத்துகின்றனர். இவ்வாறான சூழலில் கிணற்றை அமைத்து குடிநீரை இங்குள்ள மக்கள் பெற்று வாழ்க்கை நடத்தினாலும்இங்குள்ள கிணற்றினூடான குடிநீரின் தாக்கம் உப்புக்குள கிராமத்து மக்களின் உடல்களில் வெளிப்பட்டு நிற்கின்றமை வேதனையே. பிறந்த பின் பிள்ளைகளுக்கு வளரும் பற்கள் வெள்ளைநிறமாக காட்சியளிக்க நாளடைவில் காவிபோன்ற நிறத்தில் பற்கள் மாற்றமடைகின்ற வேதனையான சம்பவமும் நடந்தேறுகின்றது. இதைத்தான் சந்தனப்பிள்ளையும் பளபளண்ட பற்கள் காவிநிறத்தில் காட்சியளிக்கின்றதே‘. இங்குள்ள பிள்ளைகளுக்கு என்னஎன்னநோய்கள் ஏற்படுமோஏற்பட்டிருக்கின்றதோ?தெரியவில்லை. தண்ணீர் தேவையான போது,ஆற்றுக்கருகேசிறுமடுவினை தோண்டி நீரினை அள்ளிக்குடித்ததற்போதும் குடிக்கின்ற மக்கள் உள்ளபகுதிகளில்உவரின்றியும்,நிறமின்றியும் இருந்துவிட்டால் குடிநீருக்கு ஏற்ற நீர் என்ற எண்ணத்தில் நீரைக்குடிக்கும் மக்கள்நீரின் தன்மையை அறிய முயலமாட்டார்கள். அதேபோன்றுதான் பற்களில் காவிபடிகின்றமையும் அங்குள்ள மக்களுக்கு சாதாரணமாகிவிட்டது. ஆனால் புதிதாக பார்ப்பவதற்களுக்கே அது கவலையளிக்கும் விடயமாகின்றது. அன்றாடம் வியர்வை சிந்தி உழைக்கின்றபோது அவன் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சாதனைகள்தான்ஆனால் அவனுக்கு அவ்விடயம் சாதாரணமானதே. அதேபோலதான் பற்களில் காவியேற்படுவதும் இங்குள்ள மக்களுக்கு சாதாரணமானவிடயமென்பதினால் இதுதொடர்பில் அதிகம் சிந்திப்பதில்லை. அவர்கள் சிந்திக்கவில்லையென்பதற்காக பக்கத்து கிராமத்தில் உள்ள சந்தனப்பிள்ளையும்தங்கம்மாவும் சிந்திக்காமால்கவலையுறாமல்விடவில்லை. இவர்களில் தொடர்பில் அக்கறை கொண்டமையினால்தான்அவர்களைப்பற்றி கிணற்றடியில் பேசிக்கொண்டிருந்தனர். பேசிக்கொண்டிருக்கின்ற போதுஇருவரின் முட்டிகளிலும் நீர் நிரம்பியதும் இடுப்பில் முட்டிகளை வைத்துக்கொண்டு கிணற்றடியினை விட்டகன்றனர்.
பற்களில் காவிபடிவதென்பது சாதாரணவிடயமல்லபரிசோதிக்கவேண்டிய விடயமே.  மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் செயற்பாட்டை துரிதமாக முன்னெடுப்பார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
arangam