கல்முனை மாநகரசபை அமர்வில் அமளிதுமளி: ஒலிபெருக்கி லைற் நிறுத்தம்

கல்முனை மாநகரகசபையின் இரண்டாவது அமர்வு (30)புதன்கிழமை

நடைபெற்றபோது சபையில் அமளிதுமளி கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
குறிப்பிட்ட நேரத்திற்கு 50நிமிடம் தாமதித்தே சபை அமர்வு மாநகரமுதல்வர்
எம்.எ.றக்கீப் தலைமையில் ஆரம்பமாகியது. மு.பகல் 11.20மணிக்கு ஆரம்பித்த
சபை பிற்பகல் 4.45மணிக்கு கலைந்தது.
ஆரம்பத்தில் சென்றகூட்டஅறிக்கையை ஏற்றுக்கொள்வதில் வாதப்பிரதிவாதங்கள்
ஏற்பட்டது. பின்னர் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்து பிரதான நிதிக்குழு அமைப்பதில் இழுபறி நிலைமை ஏற்பட்டது.
நிதிக்குழு அமைப்பதற்காக முன்னர் தாம் பலரையும் சந்தித்தப்பேசியதாகவும்
அது பலனளிக்காமையினால் தற்போது கலந்துரையாடி முடிவெடுப்போம் எனக்கூறி
இறங்கிவந்தார்.
அப்போது சு.கட்சி உறுப்பினர் இசட்.எ. றகுமான் தன்னோடு முன்னரே
கலந்துரையாடவில்லை எனவே நான் ஏன் இக்கலந்துரையாடலுக்கு வரவேண்டும்
எனக்கூறி வெளிநடப்புச்செய்தார். ஆவர் வெளிநடப்புச்செய்து
கொண்டிருக்கையில் ஏனைய உறுப்பினர்கள் தயவுசெய்து வருமாறு
கேட்டுக்கொண்டதற்கிணங்க மீண்டும் அவர் சபைக்குள்வந்தார்.

முதல்வர் நிதிக்குழுவை அமைப்பதற்கு வசதியாக சபையை ஒத்திவைத்து
கலந்துரையாடலை நடாத்துவதற்காக இருக்கையை விட்டு இறங்கிவந்து
உறுப்பினர்களுடன் அமர்ந்துகொண்டு கலந்துரையாடினார்.
நிதிக்குழு தெரிவானது . பகிரங்க வாக்கெடுப்பு மூலம் 5உறுப்பினர்கள்
தெரிவானார்கள். த.தே.கூட்டமைப்பைச்சேர்ந்த ஹென்றிமகேந்திரன்
பொன்.செல்வநாயகம் அ.இ.ம.காங்கிரஜசச்சேர்ந்த முபீன் சாய்ந்தமருது
தோடம்பழம் சுயேச்சை அணியைச்சேர்ந்த அசீஸ் றிஸ்மீர் ஆகியோர்
தெரிவானார்கள்.
மேயர் தெரிவில் ஆதரவளித்த அ.இ.ம.காங்கிரஸ் நிதிக்குழுத்தெரிவில்
எதிரணியுடன் இணைந்து ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.
அது ஆளுந்தரப்பிலிருந்து எதிரணிப்பக்கம் வசமானது முக்கிய
அம்சமாகவிருந்தது. த.தே.கூட்டமைப்பு சாய்ந்தமருது சுயேச்சைஅணி
அ.இ.ம.காங்கிரஸ் நல்லாட்சிக்கான முன்னணி மருதமுனை சுயேச்சைஅணி என்பன
இணைந்து நிதிக்குழுத்தெரிவில் ஈடுபட்டன.
பின்னர் சற்றுஇடைவேளை விட்டு பின்னர் இரண்டு உபகுழுக்கள்
தெரிவுசெய்யப்பட்டன. இதிலும் எதிரணிக்குழுக்களே தெரிவானது. பிரதான
ஆளும்தரப்பு ஒதுங்கியிருந்தது.
இடைநடுவில் பிரதிமேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு
உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனுக்குமிடையே பாரிய சொற்போர் நடைபெற்றவேளை
அமளிதுமளி ஏற்பட்டது.
அப்போது சபை முதல்வர் இருக்கையை விட்டு எழுந்துசென்றார். உடனடியாக
ஒலிபெருக்கி நிறுத்தப்பட்டதுடன் சிறிதுநேரம் மின்விளக்குகளும்
அணைக்கப்பட்டன. ஆரம்பிக்கப்பட்டன.மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன.

சிறிதுநேரத்தில் மீண்டும் சபை முதல்வர் வந்ததும் சபை நடவடிக்கைகள்
மீண்டும் தொடர்ந்தது. புpற்பகல் 4.45மணிவரை நடைபெற்று நிறைவுபெற்றது.