ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம்

(-க. விஜயரெத்தினம்)
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த ஊடகவியலாளரின் படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும், கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 14வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை(31.5.2018)  பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில்  அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது ஈகைச்சுடரேற்றப்பட்டு,அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.இதன்போது கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள்,அரசியல் பிரமுகர்கள் பாரியதொரு கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடைபெற்றது.இதன்போது கலந்துகொண்டவர்கள் “மைத்திரி-ரணில் கூட்டாச்சியிலும் தொடர்கின்றது….ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள்” ,”ஊடக சமூகம் நீதி மறுக்கப்பட்ட சமூகமா…? “ஊடகப்படுகொலைகளிற்கு நட்ட ஈடு அல்ல நீதியே எமக்கு வேண்டும்” ,”நல்லாட்சி அரசே படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணையை தாமதிப்பது ஏன்..?,யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் இராஜேந்திரனுக்கு நீதி வேண்டும்” என்றவாறு கவயீனர்ப்பில் கலந்துகொண்டவர் வாசகத்தை தாக்கி நின்றார்கள்.

இந்த நினைவு தின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார்-பிரசன்னா,மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உறுப்பினர் த.இராஜேந்திரன், ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்  கலந்துகொண்டார்கள்.

நினைவேந்தல் நிகழ்வினையடுத்து யாழில் பிரதேச ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.